Home / Jamiya / தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம் – புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம் – புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

கலாபீடத்தின் பயிற்சி நெறி

1. ஷரீஆ பிரிவு

கலாபீடத்தின் கல்வித் திட்டம் ஏழு ஆண்டு காலப் பயிற்சி நெறியாகும். அல்குர்ஆன், தப்ஸீர், ஹதீஸ், அகீதா, பிக்ஹு, இஸ்லாமிய வரலாறு, அக்லாக் போன்ற இஸ்லாத்தோடு தொடர்பான மனித வாழ்க்கைக்கு அவசியமான கலைகளும், தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகியவற்றோடு முக்கியமாக அரபு மொழியும் ஆழமாகக் கற்பிக்கப்படும்.

பயிற்சி நெறியின் நான்காம் வருட இறுதியில் தமிழ் மொழி மூலம் க.பொ.த. (சா.த.) பரீட்சைக்கும், ஏழாம் வருடத்தில் க.பொ.த. (உ.த.) பாPட்சையில் கலைப் பிரிவுக்குரிய அரபு மொழி, இஸ்லாமி

ய நாகரிகம் உட்பட தமிழ், அரசியல், பொருளியல் ஆகியவற்றில் ஒன்றுடன் மூன்று பாடங்களில் மாத்திரம் தோற்றுவதற்குப் பயிற்றுவிக்கப்படுவர். ஏழாம் வருட முடிவில் கலாபீட இறுதிப் பாPட்சைக்குத் தோற்றிச் சித்தியடைபவர்களுக்கு ‘மௌலவி ஆலிம்” என்ற பட்டம் வழங்கப்படும். அத்தோடு இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் ‘அல் ஆலிம்’ பரீட்சைகளுக்குத் தோற்றுவதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

2. ஹிப்ழ் பிரிவு

ஹிப்ழ் பிரிவு கலாபீடத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். இப்பிரிவுக்கு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்கள் 3 வருடங்களில் அல்குர்ஆனன முழுமையாக மனனம் செய்ய வேண்டும். அத்தோடு அரச பாடசாலை பாடங்களான தமிழ், சிங்களம், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், வரலாறு போன்ற பாடங்கள் கற்பிக்கப்படும். தவணைப் பரீட்சைகள், வகுப்பேற்றப் பரீட்சை போன்றவற்றில் மாணவர்கள் சித்தியடைவது கட்டாயமாகும். ஹிப்ழ் முடிக்கும் மாணவாகள் ஷரீஆப் பிரிவின் முதலாம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்படுவர;. 3 வருடத்தினுள் ஹிப்ழ் முடிக்கத் தவறும் மாணவர்கள் தொடர்ந்து ஹிப்ழ் பிரிவில் இருக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.

கலாபீடத்தின் எல்லா மாணவர்களுக்கும் பாடநூல், நூலக, உணவு, விடுதி, விளையாட்டு வசதிகள் வழங்கப்படும். ஒவ்வொரு மாணவனிடமிருந்தும் மாதாந்தம் ரூபா 6,000/= அறவிடப்படும். (நிதி நிலைமைகளைப் பொறுத்து இத்தொகையில் மாற்றம் ஏற்பட இடமுண்டு). வெளிவாhpப் பாPட்சைகளுக்கான எவ்விதச் செலவுகளையும் கலாபீடம் பொறுப்பேற்கமாட்டாது.

எல்லா மாணவர்களும் தமது முழுத் திறமைகளையும் பயன்படுத்தித் தம்மை அறிவும் ஆற்றலும் மிக்கவர்களாக மாற்றிக்கொள்ளவும், எழுத்தாற்றல், பேச்சாற்றல்களை வளர்த்துக்கொள்ளவும் போதிய பயிற்சிகள் வழங்கப்படும்.

கலாபீடத்தின் சட்டதிட்டங்களைப் பூரணமாகப் பின்பற்றி, ஒழுக்க நடவடிக்கைகளில் மிகவும் நல்ல முறையில் நடந்து, பயிற்சிநெறியில் போதிய கவனம் எடுத்துப் படிப்பை மேற்கொள்பவர்கள் மாத்திரமே பாPட்சைக்குத் தோற்ற அனுமதிக்கப்படுவார்கள் ஃ வகுப்பேற்றப்படுவார்கள். ஒரே வகுப்பில் இரண்டு முறை தொடர்ந்து சித்தியடையத் தவறும் மாணவர்கள் கலாபீடத்தில் கல்வி பயிலத் தகுதியற்றவர்களாகக் கணிக்கப்பட்டு கலாபீடத்திலிருந்து நீக்கப்படுவர். எக்காரணம் கொண்டும் எந்த மாணவரும் இடையில் விலகிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். அவ்வாறு விலகிச் செல்லும் பட்சத்தில் குறித்த மாணவர் கலாபீடத்தில் கல்வி கற்ற கால எல்லைக்குள் அவருக்காகக் கலாபீடம் செலவிட்ட செலவினங்களைத் திருப்பி ஒப்படைக்கப் பெற்றார் ஃ பாதுகாவலர் தயாராக இருத்தல் வேண்டும்.

கலாபீட அனுமதிக்கான தகைமைகள்

1. ஷரீஆ பிரிவு

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய ஏதாவது மொழியில் 2018ம் ஆண்டு எட்டாம் வகுப்பில் கல்வியைத் தொடரத் தகுதிபெற்ற, ஆல்குர்ஆனைத் திருத்தமாக ஓதத் தொpந்த, நல்லொழுக்கமுள்ள, திறமையான, 13 வயதுக்குட்பட்ட முஸ்லிம் மாணவர்கள் கலாபீடத்தில் நுழைவு பெறத் தகுதியுடையோராவர்.

2. ஹிப்ழ் பிரிவு

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய ஏதாவது மொழியில் 2018ம் ஆண்டு ஆறாம் வகுப்பில் கல்வியைத் தொடரத் தகுதி பெற்ற, ஆல்குர்ஆனைத் திருத்தமாக ஓதத் தெரிந்த, நல்லொழுக்கமுள்ள, திறமையான, 11 வயதுக்குட்பட்ட முஸ்லிம் மாணவர்கள் கலாபீடத்தின் ஹிப்ழ் பிரிவிற்கு நுழைவு பெறத் தகுதியுடையோராவர்.

இத்தகுதிகளைப் பூரணமாகப் பெற்றிருக்கும் மாணவர்கள் மாத்திரம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரத்தோடு சுய விலாசமிடப்பட்டு, பதிவுத் தபாலுக்கான முத்திரையும் ஒட்டப்பட்ட 9” x 4” அளவிலான தபாலுறை ஒன்றையும் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விண்ணப்ப முடிவுத் திகதி 30/11/2017 

விண்ணப்பப் படிவத்தைத் தரவிறக்கம் செய்ய

தகுதி காண் நேர்முகப் பரீட்சை

தகுதி பெற்ற மாணவர்கள் கலாபீடத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு இஸ்லாமிய அறிவு, பொது உளச்சார்பு, பொது அறிவு, மொழி (தமிழ், ஆங்கிலம், சிங்களம்), கணிதம் முதலான துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்களை உள்ளடக்கிய (ஒரு மணி நேர) எழுத்துப் பரீட்சை ஒன்றிற்கும், நேர்முகப் பரீட்சை ஒன்றிற்கும் தோற்ற வேண்டும். இவற்றில் கூடிய புள்ளிகளைப் பெறும் மாணவர்கள் மாத்திரமே கலாபீடத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.